இது சென்னை தாம்பரத்தில் இன்று காலை எடுக்கப்பட்டது.
செவ்வாய், 12 ஜனவரி, 2010
ஏன் மண்வாரி தூற்றவேண்டும்?
மணல் லாரிகள் சாலைகளில் போகிறபோது எந்தவிதமான பாதுகாப்பு முறைகளும் பின்பற்றுவதில்லை. ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் பயணிக்கிறவர்கள் கதி அதோகதி தான்.
நம்மில் எத்தனையோ பேர் தினசரி படுகிற அவஸ்தை தான். சில வண்டிகளில் பார்த்திருக்கிறேன். பெரிய தார்ப்பாலின் சீட் வைத்து நான்கு புறமும் கட்டி செல்கிற மணல் லாரிகளை. ஆனால் பெரும்பாலான சமயங்களில், மண் வாரிதூற்றி செல்கிற வண்டிகளை தான் பார்க்க முடிகிறது. அப்படி என்ன தான் கோபம் நம்மீது இவர்களுக்கு?
இதற்கெல்லாம் ஒரு படி மேலே கல் ஏற்றி செல்கிற வண்டிகள்.
எதோ ஒரு எதிர்பாரா நிமிடத்தில் திடிரென சடன்பிரேக் போட்டு லாரி நிறுத்தவேண்டி வந்தால்...? கற்பனை செய்து பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. லாரி உரிமையாளர்களே வேண்டாமே இந்த விபரீதங்கள்.
திங்கள், 11 ஜனவரி, 2010
நம்ம சென்னை - மாடுகளுக்கும் தான்
அலுவலகத்திற்கு டூவீலரில் செல்லும்போது தற்செயலாக கவனித்து தான். வழியெங்கும் மாடுகள். மிக நெரிசலான சாலை பகுதிகளில் கூட ஒய்யாரமாக அமர்ந்திருந்த மாடுகளை கவனித்த பொது ஆச்சர்யமாக இருந்தது. இவ்வவளவு மாடுகள் கவனிப்பாரற்று திரிவது எதனால் என்பது ஒரு புறம் இருக்க, ஏன் போக்குவரத்து இடைஞ்சலாக இருக்கும் மாடுகளை கண்டு கொள்ளாமலே இருக்கிறார்கள் என்பதும் பெரிய கேள்வி.
இருபது நிமிடம் பயணம் செய்யகூடிய எனது அலுவலுக வழியில் என்னால் எடுக்க முடிந்த போட்டோக்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






















